Showing posts with label என் வீட்டில்... குழந்தை. Show all posts
Showing posts with label என் வீட்டில்... குழந்தை. Show all posts

Monday, August 3, 2009

என் வீட்டில்...

குடியிருப்போரை குறை கூறினார்
வீட்டின் உரிமையாளர்,
'வீட்டை வைத்துக்கொள்ளத்தெரியவில்லையே;
எங்கள் வீட்டைப் பாருங்கள்! அங்கே,
சுவர்களில் வண்ணக்கிறுக்கல்கள் இல்லை;
சன்னல்களில் கீறல்கள் இல்லை;
கதவுகள் கிறீச்சிடவில்லை;
கண்ணாடிகள் உடையவில்லை;
தரையில் பிசுபிசுப்பில்லை;
தண்ணீர்க்குழாய்கள் கசியவில்லை!'
உரைத்தவை யாவும் உண்மையே;
சொல்லத்தவறிய உண்மையொன்றும்
ஒளிந்திருந்தது உள்ளே.
ஆம்;
அவ்விடம் குழந்தைகளும் இல்லை!