Wednesday, February 2, 2011

முன்கோபம்

நீ பேசுகையில்
அதரங்கள் அசைவு காணவேண்டும்

நீ சிரிக்கையில்
கன்னக்குழி காணவேண்டும்

நீ நடக்கையில்
பாத சுவடு காணவேண்டும்

உன் கோபத்தில்
மைவிழிகள் காணவேண்டும்

முகில் நிறத்தவளே..

முகம் காட்ட வா.

முன்கோபம்
உன்னால் அழகு பெற்றது.

என்கோபம் பொய் என்றறிவாய்.

தனிமை பொறுக்கா நீ...
தனியனாய் எனை விடாதே.
Reply With Quote Multi-Quote This Message Quick reply to this message