எனது அத்தை மகள் கைபேசியை தொலைத்து விட்டார். காவல் நிலையத்தில் புகார் செய்தபோது அவர்கள் நம்பர் IMEI நம்பர்
என்ன வென்று கேட்டார்கள். எனது அத்தை மகள் என்னிடம் கேட்ட போது நான் திரு திரு என்று முழித்தேன். அந்த நிலை
யாருக்கும் வரக்கூடாது என்பதால் இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
IMEI விரிவாக்கம் முதலில் என்ன வென்று தெரிந்து கொள்வோம். INTERNATIONAL MOBILE EQUIPMENT IDENTITY என்பதாகும்.
மேலும் IMEI நம்பரை தெரிந்துகொள்ள *#06# அழுத்தவேண்டும்.அல்லது கைபேசியின் பேட்டரி பொருத்துமிடத்தில் அச்சிட பட்டிருக்கும்.
இதை உடனுக்குடன் தெரிந்து கொள்ள உதவிய நண்பர் சிவானந்தத்திற்கு நன்றி
இது ஏற்கனவே உங்களுக்கு தெரிந்து இருந்தால் ஜாபகபடுத்தி கொள்ளுங்கள்
No comments:
Post a Comment