Monday, February 8, 2010

ஒரு நடிகையின் வேதனை

நான் மூடி மறைத்தால் முக்காடு போடுவான் ,
முதலாளி,

கவர்ச்சி என்ற பெயரில் காம பொருளாக காட்டும் உலகம் ,
எங்களையும் கொஞ்சம் பாருங்கள் நாங்களும் பெண்தான்,

பன்னீரில் குளித்து ,
மணக்கும் பூ சூடி ,
புத்தாடை அணிந்து ,
தெரிந்தே விழுகின்றோம் சாக்கடையில்,

எத்தனையோ மரம் சுற்றி ,
கதாநாயகனை தழுவி ,
பாட்டு பாடியாச்சு ,
உண்மை காதல்தான் இன்னும் வரவில்லை ,
நிழலிலும் ,நிஜத்திலும் ,

என் இதழ்களை சுவை பார்த்து ,
சேலையை துட்சாதனன் போல இழுத்து ,
தாயின் தொப்புள் கொடியில் ஆம்ப்லேட் போட்டு ,
எதார்த்தம் என்ற பெயரில் தேவைதானா ,இக்காட்சி ,
மனம் திறக்கட்டும் உன் மனசாட்சி ,

கையில் பணம் என்னும் விளக்கை வைத்து ,
தெரிந்தே விழுகின்றோம் இருட்டு பாதாள குழியில் ,

இயற்கை கொடுத்த பரிசு இளமை என்னும் அழகு ,
அது போன பின்னே அத்தனையும் என்னை விட்டு விலகும் ,

வயிற்றை காட்டுகிறேன் என் வயிற்றை கழுவ ,

தும்மினாலும் ,
பால் குடித்தாலும் ,
பாயாசம் குடித்தாலும் ,
படுக்கையில் படுத்தாலும் ,
பாத் ரூமில் குளித்தாலும் ,
என் அங்கங்களை வைத்து ,
படம் எடுத்து வியாபாரம்தான் ,செய்கிறது இந்த உலகம் ,
என் சோகத்தை கூட மண்ணில் முகம் புதைத்து அழுகின்றேன் ,

இது யார் செய்த பிழை ,
என்னை படைதவனா
இல்லை பெற்றவனா ,
பதில் சொல்லுமா இந்த உலகம் ?,
ஏங்குகிறோம் உண்மையான பாசத்திற்கு எங்கும் ..

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=22696

No comments:

Post a Comment