சிஸ்டம் பாஸ்வேர்ட் மறப்பவர்களுக்கு.
-------------------------------------
ஜூன் 15,2009,
போன் மூலமாகவும் கடிதம் மூலமாகவும் பல வாசகர்கள் என் சிஸ்டம் பாஸ்வேர்டை மாற்றினேன்; அல்லது பல நாட்களாக கம்ப்யூட்டரைத் தொடவில்லை. அதனால் பாஸ்வேர்ட் மறந்து போச்சு. என்ன செய்யலாம்? என்றெல்லாம் கேட்கின்றனர். இவர்களுக்கு ஒரு அருமருந்து ஒன்று தரப்போகிறேன்.
பாஸ்வேர்ட் டைப் செய்கிறோம். சில வேளைகளில் தவறாக டைப் செய்கிறோம். சில வேளைகளில் மறந்து போய் பழைய பாஸ்வேர்ட் அல்லது வேறு ஒரு பாஸ்வேர்ட் கொடுக்கிறோம். இதற்குப் பதிலாக ஒரு பிளாப்பி அல்லது யு.எஸ்.பி. டிரைவில் பாஸ்வேர்டைப் போட்டு வைத்து அதனைச் செருகி கம்ப்யூட்டரை ஆன் செய்தால் அதுவே பிளாப்பி அல்லது பிளாஷ் டிரைவிலிருந்து பாஸ்வேர்டை எடுத்துக் கொண்டால் நன்றாக இருக்கும் அல்லவா? ஆஹா! என்கிறீர்களா! கீழே படியுங்கள். ஆஹா அஹஹா!! என்பீர்கள்.
இந்த டிஸ்க்கிற்குப் பெயர் பாஸ்வேர்ட் ரீசெட் டிஸ்க் (Password Reset Disk) ஆகும். இந்த டிஸ்க் நீங்கள் பிளாப்பி டிஸ்க் அல்லது யு.எஸ்.பி. டிரைவ் வைத்துப் பயன் படுத்தினால் தான் சரியாக இருக்கும்.
1.முதலில் ஸ்டார்ட் கிளிக் செய்து கண்ட்ரோல் பேனல் தேர்ந்தெடுக்கவும்.
2. அதன்பின் யூசர் அக்கவுண்ட்ஸ் என்ற பிரிவில் கிளிக் செய்திடவும்.
3. இதில் உங்கள் அக்கவுண்ட்டில் கிளிக் செய்திடவும்.
4. இப்போது கிடைக்கும் விண்டோவில் இடது பக்கம் உள்ள சைட் பாரினைப் பார்க்கவும். இதில் Prevent a Forgotten Password என்ற பிரிவில் கிளிக் செய்திடவும்.
5. இனி Forgotten Password விஸார்ட் கிடைக்கும்.
6. இனி உங்கள் பிளாப்பி அல்லது பிளாஷ் டிரைவினைச் செருகவும்.
7. தற்போதைய விண்டோஸ் எக்ஸ்பி யூசர் அக்கவுண்ட் மற்றும் பாஸ்வேர்டினை டைப் செய்திடவும். பின் Nஞுதுt அழுத்தவும். சில நொடிகளில் உங்கள் Password டிஸ்க் ரெடியாகிவிடும்.
8. இனி விஸார்டில் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
9. இதில் Password Reset Disk என எழுதி வைக்க மறக்க வேண்டாம். இதனை எப்படி பயன்படுத்துவது? எப்போதாவது உங்கள் பாஸ்வேர்ட் மறந்து போய்விட்டதா?
1.வெல்கம் ஸ்கிரீன் வந்தவுடன் உங்கள் யூசர் நேம் கிளிக் செய்து என்டர் அழுத்தவும்.
2. அடுத்து ஒரு மெசேஜ் கிடைக்கும். அதில் உங்கள் பாஸ்வேர்ட் ரீசெட் டிஸ்க்கினை செருகவும் என்று இருக்கும்.
3. அடுத்து "Use your password reset disk" என்று இருக்கும் இடத்தில் கிளிக் செய்திடவும்.
4. மீண்டும் Password Reset Wizard என்ற விஸார்ட் திறக்கப்படும். தொடர்ந்து புதிய பாஸ்வேர்ட் அமைப்பதற்கான வழி முறை கிடைக்கும். அதனைப் பின்பற்றவும். புதிய பாஸ்வேர்ட் ஒன்றி னை அமைத்து இயக்கலாம்.
5. இனி மீண்டும் ஒரு Password Reset Disk தயாரிக்க வேண்டியதில்லை. இதனையே எப்போதெல்லாம் உங்கள் பாஸ்வேர்ட் மறந்து போகிறதோ அப்போதெல்லாம் இதனைப் பயன்படுத்தலாம். விஸ்டாவிலும் இதே போல நடைமுறையே கடைப்பிடிக்கப்படுகிறது.
நன்றி:தினமலர் கம்ப்யூட்டர்மலர்.
Thursday, July 16, 2009
Tuesday, July 14, 2009
confusingwords
ஆங்கிலச் சொற்கள் அடிக்கடி நம்மைக் குழப்பும் வகையில் பல இருக்கின்றன. (எடுத்துக்காட்டு affect, effect, their, they’re) இது போன்ற எழுத்துக்களில் உள்ள சிறிய வித்தியாசத்தால் நம்மைக் குழப்பும் சொற்களுக்கான தெளிவான பொருள் தரும் இன்டர்நெட் வெப்சைட்
http://www.confusingwords.com/index.php
http://www.confusingwords.com/index.php
ஐ.ஐ.டி பாடங்களை தரவிறக்கம் செய்ய...
ஐ.ஐ.டி பாடங்களை தரவிறக்கம் செய்ய...
--------------------------------------------------------------------------------
இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறையினரால் நடத்தப்பெறும் இந்த இணையத்தளம் ஐ.ஐ.டி யில் பயிற்றுவிக்கப்படும் பாடங்களை இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ள அனுமதிக்கிறது. எல்லாவிதமான பொறியியல் படிப்புகளுக்கான பாடங்களும் கிடைக்கின்றன.
இண்டியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி மற்றும் இண்டியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சைன்ஸ் ஆகியவை ஒருங்கிணைந்து இதை நமக்கு வழங்குகின்றன.
பார்க்க விரும்புவோர் தட்டச்ச வேண்டிய சுட்டி:
Code:
http://www.nptel.iitm.ac.in
படிக்க விரும்புவோருக்கு இது நல்ல வழிகாட்டியாக இருக்கும்.
--------------------------------------------------------------------------------
இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறையினரால் நடத்தப்பெறும் இந்த இணையத்தளம் ஐ.ஐ.டி யில் பயிற்றுவிக்கப்படும் பாடங்களை இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ள அனுமதிக்கிறது. எல்லாவிதமான பொறியியல் படிப்புகளுக்கான பாடங்களும் கிடைக்கின்றன.
இண்டியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி மற்றும் இண்டியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சைன்ஸ் ஆகியவை ஒருங்கிணைந்து இதை நமக்கு வழங்குகின்றன.
பார்க்க விரும்புவோர் தட்டச்ச வேண்டிய சுட்டி:
Code:
http://www.nptel.iitm.ac.in
படிக்க விரும்புவோருக்கு இது நல்ல வழிகாட்டியாக இருக்கும்.
Subscribe to:
Posts (Atom)