Wednesday, February 25, 2009

வில்லு ஒரே சொல்லு

எவ்வளவோ எதிர்பார்ப்பின் பேரில் வில்லு படத்துக்கு முதல் ஷோ ஈஷூன் சினிமாவிற்குச் சென்று படத்தைப் பார்த்து நான் (நான் மற்றும் அல்ல) சற்று ஏமாந்து நொந்து நூலாகியுள்ளேன்….

வில்லு ஒரே சொல்லு பார்க்காதீங்க
விஜய் மற்றும் பிரபு தேவாவின் கூட்டனியில் மற்றுமோர் படம். என்னவென்று சொல்வேன் ரசிகர்களின் மனதை புண்படுத்த வந்த போக்க்ரியின் காயம் இன்னும் ஆராத நிலையில் மீண்டும் ரணகள படுத்தியிருக்கிறார்கள். முழுக் கதையையும் சொல்லிவிட்டால் படம் பார்க்கும் சுவாரஸ்யம் போய்விடும் என்பது உங்களுக்குத் தெரியாதா? ஆனால் இதில் கதையே ??????
படம் எதிர்பார்த்ததில் ஒரு கால் பங்களிவிற்க்கு கூட இல்லை என்பதே எனது கணிப்பு
இப்படி ஒரு படம் தேவையில்லை
படத்தில் ஹைலைட் கடைசி 45 நிமிடங்கள் தான். சிரிப்போ சிரிப்பு….. விஜய் ரசிகர்களும் சிரிப்போ சரிப்பு…
படத்தின் பிளஸ் பாயிண்ட் பாடல்கள்.. விஜய் படத்துக்கு (ஆடலுக்கு) ஏற்ற பாடல்கள். ஹிட்டாகும்
காமெடி என்றபேரில் வடிவேல் ஒருவர் தேவையில்லை… ஏனெனில் படத்தின் கதை காமெடி…
பேக்ரவுண்டை சொல்ல ஆரம்பிப்பதில் காமெடி துவங்குகிறது….
என் பேவரட்.. பிரகாஷ் ராஜ் ஒன்லி ஒன் மென் வெரி நைச் ஆக்டிங்
நயந்தாராவுக்கு முத்திரை குத்தி விட்டார்கள் இனிமேல் நயன் பலான படங்களில் நடிக்கலாம். நயன் ரொம்ப மோசம்
விஜய் ரசிகர்களே படம் பார்க்காதீங்க…பார்த்தால் பார்க்கும் ஒவ்வொரு எண்ணிக்கை குறையும் ரசிகர்களில். முதலில் நான்…..

கொஞ்சம் கொஞ்சேன்...

கொஞ்சம் கொஞ்சேன்...
கொஞ்சம் பேசிவிடேன்
என்னிடம்..
கோபத்திலும் நீ அழகாக
இருக்கிறாய்
என்ற பொய்யை
எத்தனைமுறைதான்
சொல்வது
செல்லக் குரங்கே..??
நான் நல்லா இருக்கிறேனா
இல்லை என் சுடிதார் நல்லா இருக்கா
எனக் கேட்கிறாய்..
இரண்டுபேருமே
சேர்ந்திருந்தாலும் அழகுதான்
சேராமலிருந்தாலும் அழகுதான்
எனச் சொன்னால் ஏண்டி
அடிக்க வருகிறாய் ...??

என்னிடம் உனக்கு
என்ன பிடிக்கும் என
நீ தானே கேட்டாய்...??
சொல்லவா இல்லைக்
காட்டவா எனச்
சொன்னதற்குப் போய்
இப்படிக் கிள்ளுகிறாயே
ராட்சசி...

ஹய்யோ உன்னைப் போய்
எந்த லூசுடா காதலிப்பா...
எனக் கேட்கிறாய்
நீ என்னவோ
பெரிய அறிவாளி
என நினைத்துக்கொண்டு...

ஒரேயொரு முத்தம்
கொடுடி என
இனியும் உன்னைக்
கெஞ்சிக்கொண்டிருக்கமாட்டேன்..
தேவையில்லாமல் என்னைத்
திருடனாக்காதே...

உன்னைக் கெஞ்சக்
கெஞ்சரொம்பத்தான்மிஞ்சுகிறாய் நீ..
என்னடா
நினைத்துக்கொண்டிருக் கிறாய்
எனக்கோபமாகக் கேட்கிறாய்
உன்னைத்தான் என்ற
உண்மை உணராமல்...

என்னை விட்டுத்தொலையேன்
என நீ கோபமாகச்
சொல்லிச்சென்றால் எப்படி..?
விட்டுத்தான் தொலைத்துவிட்டேன்
என்னை உன்னிடம்...

உன்னைக்
காதலித்ததால்தான்
நான் கவிதை
எழுதிக்கொண்டிருப்பதா ய்
என எல்லோரும்சொல்கிறார்கள்...
நான் காதலிப்பதே
ஒரு கவிதையைதான்
என உணராத
அற்ப மானிடர்...

என்னைவிட உன்னை
இப்படி இறுக்கிப்
பிடித்திருக்கும் உன்
உடைமீது கூட
இப்பொழுதெல்லாம்
பொறாமை வருகிறது
தெரியுமா...?

நீ ஒன்றும் பெரிய
அழகியெல்லாம் இல்லை
ஏதோ நான் காதலிப்பதால்
பேரழகியாகத்தெரிகிறாய
என உண்மையை சொன்னால்
ஏண்டி இப்படி முறைக்கிறாய்..?

உன்னை வர்ணித்து
எல்லாம் கவிதை
எழுதமுடியாதடி....
நாம் மட்டுமேரசிக்கும்
கவிதை நீ...